» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கழிவுநீர் தொட்டி நிரம்பி சாலைகளில் ஓடுவதை தடுக்க கோரிக்கை: பொதுமக்கள் போராட்டம்!!

செவ்வாய் 6, ஜனவரி 2026 8:28:00 AM (IST)

திருச்செந்தூரில் வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டி நிரம்பி சாலைகளில் ஓடுவதை தடுக்க கோரி நேற்று நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சி 18-வது வார்டு பகுதியான முத்தாரம்மன் கோவில் தெருவில் குடியிருப்பு பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும் போது பழைய வடிகால் பாதைகள் அடைக்கப்பட்டு புதிய பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த இணைப்புகள் சரியான முறையில் வழங்கப்படாததால், வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகளில் இருந்து வெளியேறி பாதாள சாக்கடையில் செல்வதில்லை என கூறப்படுகிறது.

இதனால் தொட்டிகளில் நிரம்பி வழியும் கழிவு நீர் சாலைகளில் தேங்கி, கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் இதே பகுதியில் ஏற்கனவே அகற்றப்பட்ட பேவர் பிளாக் கற்களையே மீண்டும் பயன்படுத்தி சாலைகளை புதுப்பித்து வருவதாகவும், கடந்த 3 மாதங்களாக சாலைகள் முறையாக சீரமைக்கப்படவில்லை எனவும், இது தொடர்பாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, ஆணையாளர் ஈழவேந்தன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். 

பின்னர் தொட்டியில் இருந்து நிரம்பி வழியும் கழிவு நீரை அப்புறப்படுத்துவதற்காக நகராட்சியில் இருந்து நீர் உறிஞ்சும் வாகனம் அனுப்பப்பட்டது. அங்கு சென்ற வாகனத்தையும் பொது மக்கள் சிறைப்பிடித்து, பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory