» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 6, ஜனவரி 2026 8:30:12 AM (IST)
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந்தேதி அரங்கேறியது. இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. 105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ., துரிதமாக செயல்பட்டு 3 மாதத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் முதல் நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மருத்துவ சிகிச்சையை சுட்டிக்காட்டி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மருத்துவ சிகிச்சைக்காக ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மக்கள் கருத்து
இது தான் திராவிடம் புகுந்த தமிழ்நாடுJan 6, 2026 - 12:10:24 PM | Posted IP 162.1*****
தமிழ் நாட்டில் காவலர்கள் தப்பு செய்தால், உருப்படியாக தண்டனை கிடைக்காது , கேரளா நீதிமன்றத்தை அணுகி விடுங்கள் , தமிழகத்தில் இருக்கும் நிறைய கொலை குற்றவாளிகள் தூக்குத்தண்டனை கிடைக்கும்.
மேலும் தொடரும் செய்திகள்

அன்புமணியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது ஏற்புடையது அல்ல! - ராமதாஸ்
புதன் 7, ஜனவரி 2026 5:14:15 PM (IST)

நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)

தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? டெல்லி ஆள வேண்டுமா? முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
புதன் 7, ஜனவரி 2026 3:28:18 PM (IST)

திருச்செந்தூர் தைப்பூச விழாவிற்கு சிறப்பு ரயில் இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
புதன் 7, ஜனவரி 2026 12:54:47 PM (IST)

தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 7, ஜனவரி 2026 11:19:57 AM (IST)

சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் பஸ் மோதி உயிரிழப்பு - குமரியில் சோகம்!
புதன் 7, ஜனவரி 2026 11:12:54 AM (IST)


BabuJan 6, 2026 - 06:31:24 PM | Posted IP 172.7*****