» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி

செவ்வாய் 6, ஜனவரி 2026 3:43:11 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு குறித்து கூறியதாவது:- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.

தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்று கடந்த 100 ஆண்டு காலமாக இல்லை. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது. யாரோ ஒருவர் கேட்டதற்காக தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறார்கள். இல்லாத ஒரு வழக்கத்தை நீதிமன்றம் ஏன் புகுத்த வேண்டும்? பிரச்சனைக்குரிய அந்த தூண் தீபத்தூண் கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.


மக்கள் கருத்து

TamilanJan 6, 2026 - 04:42:39 PM | Posted IP 104.2*****

Meendum meendum hindukkaluku aneethi ilaikaatheergal.... uchchaneethimandrathilum ungaluku sampattiadi vilum....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory