» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தக்கலையில் 8ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆய்வு

செவ்வாய் 6, ஜனவரி 2026 5:30:33 PM (IST)



தக்கலையில் வருகிற 8ஆம் தேதி நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (06.01.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

தமிழ்நாட்டை நோயில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தமிழ்நாடு முழுவதும் 02.08.2025 அன்று சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்கள்.

இம்முகாமில் சிறந்த மருத்துவர்களை வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தங்களது முழு உடலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அட்டை பெற்ற நபர்களுக்கு, இம்முகாமில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முகாமில் ஆண்கள், பெண்கள், கர்ப்பிணிகள் (மகப்பேறு) என மூன்றாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிட்சை, எலும்பு முறிவு மருத்துவம், பேறுகால மருத்துவம், குழந்தை நல மருத்துவம், இதயநல சிறப்பு மருத்துவம், நரம்பியல் சிறப்பு மருத்துவம், நுரையீரல் சிறப்பு மருத்துவம், நீரிழிவு நோய்கான சிறப்பு மருத்துவம், தோல் சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம், கண் சிறப்பு மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், இயற்கை மருத்துவம், உணவியல் ஆலோசணை உள்ளிட்ட ஆகிய 17 சிறப்பு மருத்துவ சிகிட்சை, சிறப்பு மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

அதனடிப்படையில் வரும் (வியாழக்கிழமை) 08.01.2026 பத்மநாபபுரம் நகராட்சி, இரணியல், விலவூர், திருவிதாங்கோடு ஆகிய பேரூராட்சி மற்றும் முத்தலக்குறிச்சி, சடையமங்கலம், நுள்ளிவிளை, கல்குறிச்சி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் – முழு உடல் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்கள்.

ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் அரவிந்த் ஜோதி, பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் கண்மணி, வட்டார மருத்துவ அலுவலர், முகாம் ஒருங்கிணைப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory