» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லோடு ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் காயம்: சாலையில் சிதறிய வாழைக்காய்கள்..!

திங்கள் 12, ஜனவரி 2026 7:57:56 AM (IST)



கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாழைக்காய் பாரம் ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர் காயமடைந்தார்.

மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வாழைக்காய் ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ, மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி இபி காலனி அருகே சென்றபோது, பின்பக்க டயர் வெடித்ததில் சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் மகன் மார்த்தாண்டம் (53) காயமடைந்தார்.

ஆட்டோவில் ஏற்றி வந்த வாழைக்காய்கள் சாலையில் சிதறின. அப்போது அந்த வழியாக வந்த கோவில்பட்டி காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன், விபத்தில் சிக்கிய டிரைவரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டார். விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory