» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமமுக துணைப் பொதுச் செயலாளர் நீக்கம் : டிடிவி தினகரன் அறிவிப்பு

வெள்ளி 23, ஜனவரி 2026 10:22:56 AM (IST)

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/TTV-PRESS_1546673194_1769143998.jpgஇதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் - தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், "கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு முரணான முறையில் செயல்படுவதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாலும், கட்சி ஒழுக்கத்தை மீறி கட்சிக்கு அவமானத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாலும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கப்படுகிறார்.

கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory