» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மொரீஷியஸில் தைப்பூச விழா பக்திப் பாடல்கள் பாட 7 பேர் குழு : தமிழச அரசு அனுப்பியது!

செவ்வாய் 27, ஜனவரி 2026 10:27:13 AM (IST)


மொரீஷியஸில் உள்ள முரு​கன் கோயில்​களில் நடை​பெறும் தைப்பூச விழா​வில் தமிழ் பக்​திப் பாடல்​களை பாட 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அனுப்​பி​யுள்​ளது.

ஆப்​பிரிக்க கண்​டத்​தில் உள்ள குட்டி தீவு மொரீஷியஸ். இதன் மக்​கள்​தொகை 12 லட்​சம். இந்​திய வம்​சாவளி​யினர் இங்கு அதி​க​மாக உள்​ளனர். குறிப்​பாக தமிழர்​கள் அதி​க​மாக வசிக்​கின்​றனர். அங்கு கரும்​புத் தோட்​டங்​கள் மற்​றும் கட்​டு​மானப் பணி​களில் வலு​வான அடித்​தளமிட்ட இவர்​கள், இந்து சமய அடை​யாளத்​துடன் தைப்பூச விழாக்​களை​யும், தமிழ் மொழியை​யும் தற்​காலத்​தி​லும் சிறப்​பாகக் காத்து வரு​கின்​றனர். அரசி​யலிலும் முக்​கிய பங்​காற்​றுகின்​றனர்.

இந்த ஆண்டு வரும் பிப். 1-ம் தேதி தைப்பூச விழா மொரீஷியஸில் நடை​பெற உள்​ளது. 10 நாள் விரதம், கொடியேற்​றம் மற்​றும் பூக்​களால் அலங்​கரிக்​கப்​பட்ட காவடிகள் இத்​திரு​விழா​வின் சிறப்பு அம்​சங்​களாகும்.

இவ்​விழா தமிழ் சமூகத்​தின் ஒற்​றுமை​யை​யும், கலாச்​சார அடை​யாளத்​தை​யும் பறை​சாற்​றும் ஒரு திரு​விழா​வாக விளங்​கு​கிறது. இந்த ஆண்டு விழாவை சிறப்​பாகக் கொண்​டாட அந்​நாட்டு அரசு, தமிழக அரசின் உதவியைக் கேட்​டிருந்​தது. அதன்​படி, தமிழக அரசின் கலை பண்​பாட்​டுத் துறை சார்​பில் மொரீஷியஸுக்கு 7 பேர் கொண்ட குழுவை நேற்று அரசு அனுப்​பி​வைத்​தது.

இக்​குழு​வில் வயலின் கலைஞர் மணி சோமசுந்​தரம், கீபோர்டு இசைக் கலைஞர் விஜயகு​மார் இன்​ப​ராஜ், தபேலா மற்​றும் மிருதங்​கக் கலைஞர் முரு​கன் ராஜ​மாணிக்​கம், பக்தி பாடகர்​கள் சீனி​வாசன் துரை​சாமி, சுஜா​தா, பேட் இசைக் கலைஞர் தியாக​ராஜன் நடராஜன், ஒருங்​கிணைப்​பாளர் கார்த்​தி​கேயன் ஆத்​தூர் கருணாகரன் ஆகியோர் இடம்​பெற்​றுள்​ளனர்.

இவர்​கள் அனை​வரும், மொரீஷியஸ் முரு​கன் கோயில்​களில் நடை​பெறும் தைப்பூச விழா​வில்​ தமிழில்​ பக்​திப்​ ​பாடல்​களை இசை​யுடன்​ ​பாட​வுள்​ளனர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது. தமிழக அரசு சார்பில், மொரீஷியஸ் நாட்டு அரசு வேண்டுகோளின்படி, அங்குள்ள முருகன் கோயில்களில் தைப்பூச விழாவின்போது பக்திப் பாடல்களைப் பாட அந்நாட்டுக்கு 7 பேர் கொண்ட குழு அனுப்பப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory