» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட தீர்மானம் : தமிழக முதல்வருக்கு ஆயர் கடிதம்!
வியாழன் 29, ஜனவரி 2026 8:19:25 PM (IST)

புனித வெள்ளியை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடுவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோனி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், "கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும் விசுவாசமான இயேசு இறந்த புனித வெள்ளி ஏப்ரல் 3 ஆம் தேதி நினைவுகூறப்பட இருக்கிறது. அன்றைய நாட்களில் கிறிஸ்தவர்கள் இரத்ததானம் முகாம் நடத்துதல், மாநகரம் மற்றும் கிராம வீதிகளில் மக்கள் பெருமளவில் கூடி சிலுவைப் பாதை ஊர்வலம், அமைதிப்பவணிகள், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதல் என்று கிறிஸ்தவர்கள் சபைகள் கடந்து அனைத்து கிறிஸ்தவர்களும் அந்த நாளை ஒரு தியாக நாளாக கடைபிடித்து வருகிறார்கள்.
ஆகவே, அந்த நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே, டெல்லி மற்றும் கேரளா மாநிலங்களில் விடுமுறையோடு மதுக்கடைகளும் மூடப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசு உத்தரவில் ஏற்கனவே, மகாவீரர் ஜெயந்தி, மிலாடி நபி, வள்ளலார் நினைவு விடுமுறை நாட்களில் மதுக்கடைகளும் மூடப்பட்டு வருகிறது.
நாங்கள் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களளை சந்தித்து மனு வழங்கி உள்ளோம். மேலும் 03.03.2022 ஆம் ஆண்டு இருந்த சிறுபான்மை நல ஆணையர் உயர் திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தொடங்கி தொடர்ந்து தற்போதைய சிறுபான்மை நல ஆணையர் அருட்தந்தை ஜோ அருன் வரை ஐந்தாவது ஆண்டாக தமிழ்நாடு அரசுக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மதுவிலக்கு இயக்கங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு தண்ணார்வ இயக்கங்கள் வழியாக அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறோம்.
மேலும், மக்கள் தங்களின் அனைத்து சமய கலாச்சார பண்பாட்டு விழாக்கள் சிறப்பாகவும் மாண்போடும் அமைதியோடும் நடைபெற அரசே முன்வந்து அந்தந்த சிறப்பு நாட்களை மண்போடு நடத்த மதுக்கடைகளை மூட வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பூரண மதுவிலக்கு இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு படிப்படியாக மதுக்கடைகளை குறைத்தல், குடி நோயாளருக்கான மறுவாழ்வு இல்லங்கள் அமைத்தல் மற்றும் அரசு எடுக்கும் எல்லா முயற்சிகளையும் மனமுவந்து பாராட்டுகின்றோம்.
ஆகவே, அருள்கூர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பானைக்கு முன்பாக சட்டமன்றத்தில் இதை ஒரு சிறப்பு தீர்மானமாக எடுத்து தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டுமென்று உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வியாழன் 29, ஜனவரி 2026 7:53:46 PM (IST)

தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜகவும், அதிமுகவும் நெருக்கடி கொடுக்கவில்லை: விஜயதரணி
வியாழன் 29, ஜனவரி 2026 5:41:37 PM (IST)

கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகள் தேர்வு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 29, ஜனவரி 2026 5:12:53 PM (IST)

அதிமுகவில் மீண்டும் இணைய ஓபிஎஸ் விருப்பம்: எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுப்பு!
வியாழன் 29, ஜனவரி 2026 4:21:38 PM (IST)

விஜய் தலைமையில் மக்களாட்சியை அமைக்க உறுதி ஏற்போம் : என்.ஆனந்த் அறிக்கை!
வியாழன் 29, ஜனவரி 2026 11:43:31 AM (IST)

கால்நடை ஆய்வாளர் பணியிடத்துக்கான தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 29, ஜனவரி 2026 11:26:57 AM (IST)

