» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தொண்டர்கள் உற்சாகம்!

திங்கள் 16, பிப்ரவரி 2026 5:45:53 PM (IST)

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை போன்ற 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்துக்கு 234 தொகுதிகளிலும் பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். தொடர்ந்து இன்று புதுச்சேரியிலும் தேர்தலில் போட்டியிட தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தேர்தலிலேயே விஜய் தலைமையிலான தவெக பொதுச் சின்னத்தில் போட்டியிட உள்ளது. இதனை தவெக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory