» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாபெரும் காதுகுத்து விழா: வினோத அழைப்பிதழுடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:06:48 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை விமர்சித்து ‘மாபெரும் காதுகுத்து விழா’ என்று நூதன அழைப்பிதழுடன் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
"கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. நாள்: பிப்ரவரி 17, 2026, இடம்: தமிழக சட்டமன்றம், நேரம்: காலை 10 மணி முதல். இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார்.
மேற்படி விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். பி.கு: சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல்வேறு முறைகளில் 'மொய்' வைக்கலாம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏ-க்கள், அதை அனைவரும் பார்க்கும்படி கைகளில் ஏந்தி வந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியத் துறைமுக வரலாற்றில் மைல்கல்: வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏஐ அமர்வு!
புதன் 18, பிப்ரவரி 2026 5:22:09 PM (IST)

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவி மீதே தாக்குதல்: காவல்துறைக்கு இபிஎஸ் கண்டனம்!
புதன் 18, பிப்ரவரி 2026 3:41:47 PM (IST)

நடுரோட்டில் கொதிக்கும் எண்ணெய்.. ஆக்கிரமிப்பு பிடியில் விளாத்திகுளம் சாலைகள்: கிராம மக்கள் அவதி!
புதன் 18, பிப்ரவரி 2026 3:22:22 PM (IST)

நீதிமன்றத்தில் அண்ணாமலை குறுக்கு விசாரணை: 2 கப்பல்கள் வாங்கியதை ஒத்துக்கொண்ட டி.ஆர்.பாலு!
புதன் 18, பிப்ரவரி 2026 11:29:00 AM (IST)

ஆட்சியில் பங்கு என்பது குறித்து தலைமையிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன்: மாணிக்கம் தாகூர்
புதன் 18, பிப்ரவரி 2026 11:20:32 AM (IST)


BalaFeb 17, 2026 - 12:58:55 PM | Posted IP 162.1*****