» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்ட சோதனைச் சாவடிகளில் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு: எஸ்பி திடீர் ஆய்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:22:40 AM (IST)

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த எஸ்பி உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டத்தின் பிற மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது.
சோதனையின் போது வாகனங்களின் விவரங்கள் முறையாகப் பதிவேட்டில் குறிக்கப்படுகின்றன. சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் மாவட்டத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து வாகனங்களும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் நேற்று செய்துங்கநல்லூர் சோதனைச் சாவடியில் நடைபெற்று வரும் கண்காணிப்புப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்களுக்குத் தகுந்த அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின் போது, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ், செய்துங்கநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜுன்குமார் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 23, பிப்ரவரி 2026 9:06:08 PM (IST)

சென்னை - தூத்துக்குடி இடையே கூடுதல் விமான சேவை: மார்ச் 29ல் தொடக்கம் - இன்டிகோ அறிவிப்பு !
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:24:24 PM (IST)

தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்: 4.23 லட்சம் பெயர்கள் நீக்கம்
திங்கள் 23, பிப்ரவரி 2026 5:14:37 PM (IST)

இது எனக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான போர் : வேலூரில் விஜய் ஆவேசப் பேச்சு
திங்கள் 23, பிப்ரவரி 2026 3:41:57 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.10 லட்சம் வாக்காளர்கள்: இறுதி பட்டியல் வெளியீடு
திங்கள் 23, பிப்ரவரி 2026 3:31:34 PM (IST)

முதல்வர் வருகை எதிரொலி: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; ட்ரோன்கள் பறக்க தடை!
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:20:11 PM (IST)

