» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரை சித்திரை திருவிழா: ஏப்.19‍ல் கொடியேற்றம்; மே 1ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!

புதன் 11, மார்ச் 2026 4:42:43 PM (IST)



மதுரை சித்திரை திருவிழா வருகிற ஏப்.19‍ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 1-ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகள் குறித்த விவரங்கள் வருமாறு:

ஏப்ரல் 19: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.

ஏப்ரல் 26: மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெறும்.

ஏப்ரல் 28: விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

ஏப்ரல் 29: மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் நடைபெறும்.

மே 1: சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இவ்விழாவிற்கான விரிவான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதி ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory