» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உடன்குடி அனல் மின்நிலையத்தில் ஜூனில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி!
வியாழன் 19, மார்ச் 2026 8:25:48 AM (IST)

உடன்குடி அனல் மின்நிலையத்தின் முதல் அலகில் வரும் ஜூன் மாதத்திற்குள் வணிக ரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகள் என மொத்தம் 1,320 மெகாவாட் மின்சார உற்பத்தி நிலையத்தை ரூ.13,076 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் அமைத்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகளைப் பாரத கனரக மின் நிறுவனம் (BHEL) மேற்கொண்டது.
இந்த அனல் மின்நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 13-ஆம் தேதி முதல் அலகின் மின் உற்பத்தியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது இந்த அலகில் மின் உற்பத்தியை முழு கொள்ளளவிற்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் மின்வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்துத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: உடன்குடி அனல் மின்நிலையத்தின் முதல் அலகில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது மின் உற்பத்தி சுமார் 400 மெகாவாட்டை எட்டியுள்ளது. அடுத்த வாரம் முதல், அதன் முழு உற்பத்தித் திறனான 660 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் அலகுகள் இயக்கப்படும்.
அனைத்து தொழில்நுட்பச் சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்த பிறகு, வரும் ஜூன் மாதத்திற்குள் இந்த அலகில் இருந்து வணிக ரீதியிலான மின் விநியோகம் முழுமையாகத் தொடங்கும்," என அவர்கள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றால் முழு ஊதியத்துடன் 12 வாரம் பேறுகால விடுப்பு
வியாழன் 19, மார்ச் 2026 12:04:16 PM (IST)

தூத்துக்குடியில் ஏ.டி.எம்-மிற்கு கொண்டு சென்ற ரூ.30 லட்சம்: பறக்கும் படை சோதனையில் விடுவிப்பு
வியாழன் 19, மார்ச் 2026 8:34:01 AM (IST)

த.வெ.க. தலைமையில் தான் ஆட்சி : இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய் பேச்சு!
வியாழன் 19, மார்ச் 2026 8:28:45 AM (IST)

மாயமான பிளஸ்-2 மாணவி 2 மணி நேரத்தில் மீட்பு: போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்!
வியாழன் 19, மார்ச் 2026 8:20:09 AM (IST)

திருச்செந்தூர் கோயில் அருகே கடல் உள்வாங்கியது: பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடல்!
வியாழன் 19, மார்ச் 2026 8:15:36 AM (IST)

காணாமல் போன சிறுமி ஒரு மணி நேரத்தில் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!
வியாழன் 19, மார்ச் 2026 8:04:56 AM (IST)

