» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூட்டணியில் புதிய கட்சிகள் எதுவும் இணைய வாய்ப்பில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
வெள்ளி 20, மார்ச் 2026 12:44:44 PM (IST)
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவு இன்னும் நான்கு நாட்களுக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டணிகளை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று (மார்ச் 19) இரவு சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது.சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: "தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்துவிட்டன. புதிய கட்சிகள் எதுவும் இணைய வாய்ப்பில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்தவிதமான கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக வரும் செய்திகள் உண்மையில்லை. யாருக்கு எந்தத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறதோ, அதன் அடிப்படையிலேயே தொகுதிப் பங்கீடு செய்யப்படுகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அனுபவம் கொண்ட கட்சி. தற்போது தேர்தல் களத்தில் அதிமுக விரைவு ரயில் போல வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி ஏற்கனவே மூன்று முறை தமிழகத்திற்கு வந்து பொதுக்கூட்டங்களில் உரையாற்றியுள்ளார். விரைவில் அவர் மீண்டும் தமிழகம் வரவிருக்கிறார்," எனத் தெரிவித்தார்.
அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 20) அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் அமித் ஷாவைச் சந்திக்க உள்ளனர். இதன்பின் ஒட்டுமொத்தக் கூட்டணியின் தொகுதிப் பட்டியல் வெளியாக உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புதிய நிர்வாகிகள் நியமனம்!
வெள்ளி 20, மார்ச் 2026 5:49:41 PM (IST)

திமுக அரசின் அலட்சியத்தால் மக்கள் பலியாக வேண்டுமா? - நயினார் நாகேந்திரன் சாடல்!
வெள்ளி 20, மார்ச் 2026 5:12:22 PM (IST)

அரசுப் பேருந்து மோதி கோர விபத்து : 11 மாதக் குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு!
வெள்ளி 20, மார்ச் 2026 3:41:14 PM (IST)

மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு உச்சபட்ச தண்டனை உறுதி! - கனிமொழி எம்.பி கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 12:00:00 PM (IST)

மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி? - தென்மண்டல ஐஜி விளக்கம்!
வெள்ளி 20, மார்ச் 2026 11:53:37 AM (IST)

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்!
வெள்ளி 20, மார்ச் 2026 11:30:00 AM (IST)

