» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ராமதாஸ் - சசிகலா புதிய கூட்டணி அறிவிப்பு: தைலாபுரத்தில் கையெழுத்தான ஒப்பந்தம்!
சனி 21, மார்ச் 2026 12:39:39 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சசிகலாவின் புதிய கட்சி இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அ.தி.மு.க-விற்கு உரிமை கோரி வந்த நிலையில், தற்போது ஒரு முக்கியத் திருப்பமாக ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் பொறித்த கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறக் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தேர்தல் தேதியை (ஏப்ரல் 23) அறிவித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களைச் சசிகலா நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே.மணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, இரு கட்சிகளுக்கும் இடையிலான தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
கூட்டணியின் நோக்கம் குறித்து ராமதாஸ் விளக்கம்:
ஒப்பந்தத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் ராமதாஸ் "தமிழக மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் சுயமரியாதைக்காகவும் சசிகலா தலைமையிலான கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளோம். இது ஒரு வெற்றிக் கூட்டணி. வரும் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அனைத்துத் தொகுதிகளிலும் இக்கூட்டணி போட்டியிடும். எங்கள் கொள்கையை ஏற்கும் பிற கட்சிகளும் எங்களுடன் இணையலாம்." என்றார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் 'துரோக அடையாளங்களை' களைந்து, மக்கள் நலனுக்காக இந்தத் தளம் அமைக்கப்பட்டுள்ளதாகச் சசிகலா குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
சனி 21, மார்ச் 2026 5:06:31 PM (IST)

தமிழகத்தில் குடிநீர் கேன் மற்றும் பாட்டில் விலை உயர்வு: உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:17:49 PM (IST)

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)

குமரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சனி 21, மார்ச் 2026 3:35:38 PM (IST)

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்: தனியார் நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம்
சனி 21, மார்ச் 2026 8:34:28 AM (IST)

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு: ஏப்.17 முதல் கோடை விடுமுறை!
வெள்ளி 20, மார்ச் 2026 8:20:18 PM (IST)

