» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமாகா 5 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: தாமரைச் சின்னத்தில் போட்டி!
வெள்ளி 27, மார்ச் 2026 4:49:21 PM (IST)
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கட்சிக்குப் பங்கீடு செய்யப்பட்ட 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று வெளியிட்டார்.
வேட்பாளர்கள் விவரம்:
1. ராணிப்பேட்டை V.M. கார்த்திகேயன் - மாவட்டத் தலைவர் (ராணிப்பேட்டை மேற்கு)
2. ஈரோடு (மேற்கு) M. யுவராஜா - மாநிலப் பொதுச்செயலாளர்
3. ஒட்டன்சத்திரம் விடியல் S. சேகர் - முன்னாள் எம்.எல்.ஏ & மாநிலத் துணைத்தலைவர்
4. கும்பகோணம் M.K.R. அசோக்குமார் - மாநிலச் செயலாளர்
5. கிள்ளியூர் டாக்டர் J. நிவின் சைமன் - தென்மண்டல இளைஞர் அணி துணைத் தலைவர்
தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்?
இந்தத் தேர்தலில் தமாகா வேட்பாளர்கள் அனைவரும் பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இது குறித்து ஜி.கே. வாசன் அளித்த விளக்கம்: தேர்தல் ஆணையத்திடம் 'சைக்கிள்' சின்னத்தைக் கோரி பலமுறை முறையிட்டும், சட்டப் போராட்டங்களை நடத்தியும் இந்த முறை அதனைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போதே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததால், தற்போதுள்ள சூழலில் கூட்டணியின் முக்கியச் சின்னமான தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நம்பிக்கை உண்டு. நண்பகல் 12.12 மணி என்பது நூற்றுக்கு நூறு நல்ல நேரம் என்று நான் நம்புவதால் அந்த நேரத்தில் பட்டியலை வெளியிட்டேன்," என அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதான குழாய் வால்வு உடைந்து 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வீண் - தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 27, மார்ச் 2026 5:46:21 PM (IST)

நெல்லைக்கு பதில் சாத்தூரில் போட்டி: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதி மாற்றம்!
வெள்ளி 27, மார்ச் 2026 5:14:00 PM (IST)

அதிமுக கூட்டணியில் ஐஜேகே வேட்பாளர்கள் அறிவிப்பு: பல்லாவரம், குன்னம் தொகுதிகளில் போட்டி!
வெள்ளி 27, மார்ச் 2026 4:42:10 PM (IST)

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்: நெல்லை, குமரி உட்பட 127 தொகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 27, மார்ச் 2026 3:49:47 PM (IST)

விளாத்திகுளம் வேட்பாளர் சத்யா: முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவிக்கு அதிமுக மீண்டும் வாய்ப்பு!
வெள்ளி 27, மார்ச் 2026 3:34:35 PM (IST)

தூத்துக்குடியில் சி.த. செல்லப்பாண்டியன் போட்டி: ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்பி சண்முகநாதன்..!
வெள்ளி 27, மார்ச் 2026 3:14:38 PM (IST)

