» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு: தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் நேரில் புகார்!
சனி 28, மார்ச் 2026 3:59:14 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தனது பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்தார்.
சென்னை பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், அதற்குத் தேர்தல் அதிகாரிகள் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இன்று தலைமைச் செயலகம் வந்த விஜய், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்துப் பேசினார்.
தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் விஜய் அளித்த புகாரில் "தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியான திமுகவிற்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தைத் திட்டமிட்டு முடக்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டுமானால், தலைமைச் செயலாளர், சென்னை காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி, நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட 10 உயர்மட்ட அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனக்குப் பிரச்சார அனுமதி மறுக்கப்பட்டதற்கான சூழல்கள் மற்றும் அதிகாரிகள் முன்வைத்த காரணங்களை ஆட்சேபித்து, 10 முக்கியக் காரணங்களைத் தனது மனுவில் அவர் பட்டியலிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர் முதல் பத்மநாபபுரம் வரை: திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்!
சனி 28, மார்ச் 2026 5:46:11 PM (IST)

நாகர்கோவில் - இரணியல் இரட்டை ரயில் பாதை பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிப்பு!
சனி 28, மார்ச் 2026 5:40:17 PM (IST)

ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி: வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு!
சனி 28, மார்ச் 2026 5:27:45 PM (IST)

தூத்துக்குடியில் கீதா ஜீவன், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டி: திமுக வேட்பாளர் பட்டியல்!
சனி 28, மார்ச் 2026 4:23:58 PM (IST)

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் முழு விவரம் வெளியீடு
சனி 28, மார்ச் 2026 3:44:51 PM (IST)

மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கும் இயக்குனர் சுந்தர்.சி: இரட்டை இலை சின்னத்தில் போட்டி
சனி 28, மார்ச் 2026 12:55:26 PM (IST)

