» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக் மீது லாரி மோதிய விபத்தில் புதுமணத் தம்பதி பலி: திருமணமான ஒரே மாதத்தில் சோகம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:10:32 AM (IST)
கோவில்பட்டி-சாத்தூர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், பைக்கில் சென்ற புதுமணத் தம்பதி லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன் (32). தொழிலாளியான இவருக்கும், இவரது உறவினரான மனிஷா (20) என்பவருக்கும் கடந்த மாதம் (மார்ச்) 25-ஆம் தேதிதான் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இந்த விபத்து நேர்ந்துள்ளது.
புதுமணத் தம்பதி இருவரும் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு கோவில்பட்டிக்கு வந்துவிட்டு, மீண்டும் தங்களது ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். கோவில்பட்டி-சாத்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக இவர்களது பைக் மீது பலமாக மோதியது.
இந்தக் கோர விபத்தில் மனோகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மனிஷாவை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனிஷா, நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த அபூபக்கர் (31) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான சில நாட்களிலேயே தம்பதி இருவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கஞ்சம்பட்டி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் எச்சரிக்கை
சனி 11, ஏப்ரல் 2026 4:44:31 PM (IST)

இலவசங்களுக்கு நிதி எங்கிருந்து வரும்? கட்சிகள் விளக்கமளிக்க வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 4:17:05 PM (IST)

உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு
சனி 11, ஏப்ரல் 2026 3:50:15 PM (IST)

ஜனநாயகன் பட விவகாரம்: சிபிஐ விசாரணை கோரத் தயாரா? விஜய்க்கு பாஜக சவால்!
சனி 11, ஏப்ரல் 2026 3:29:40 PM (IST)

சாதியை பரப்பும் களமாக திருவிழாக்கள் இருக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்
சனி 11, ஏப்ரல் 2026 12:16:07 PM (IST)

ஜனநாயகன் இணையத்தில் வெளியாக உதயநிதி காரணம் : ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!
சனி 11, ஏப்ரல் 2026 12:10:27 PM (IST)


BabuApr 10, 2026 - 10:51:12 AM | Posted IP 104.2*****