» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனிமொழி எம்பி காரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை: விளாத்திகுளம் அருகே பரபரப்பு!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 12:26:51 PM (IST)



தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி அருகே கனிமொழி கருணாநிதி எம்பி சென்ற காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி கருணாநிதி எம்பி தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயனை ஆதரித்து அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தை முடித்துவிட்டு கனிமொழி எம்பி தனது காரில் தூத்துக்குடி நோக்கிப் புறப்பட்டார். அவருடன் காரில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் இருந்தனர்.

கார் விளாத்திகுளம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்குச் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் காரை மறித்து நிறுத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் காரின் பின்புறப் பெட்டியை (டிக்கி) திறந்து சோதனையிட்டனர். மேலும், வாகனத்திற்குரிய ஆவணங்களையும் வாங்கிச் சரிபார்த்தனர்.

முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அமைச்சர் இருந்த காரைத் தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்திச் சோதனை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் சிக்காததைத் தொடர்ந்து, அதிகாரிகள் காரைச் செல்ல அனுமதித்தனர்.


மக்கள் கருத்து

ஒட்டு போட்ட முட்டாள்Apr 14, 2026 - 04:33:12 PM | Posted IP 172.7*****

பறக்கும் படை எல்லாம் சும்மா நாடகம் போடும் படை, ஆளுக்கு 200ரூவா,500 ரூவா கொடுக்கும்போது புடிக்கமாட்டாங்களாம், அரசியல்வாதிகள் ஊர் சுத்திட்டே இருக்கும்போது சொகுசு கார்ல மட்டும் வழிமறித்து சோதனை பண்ணுவாங்களாம்.. என்னங்கடா உங்க விளங்காத படை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory