» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வளத் துறையினர் ஆய்வு

புதன் 15, ஏப்ரல் 2026 3:43:00 PM (IST)



குமரி மாவட்டம் குளச்சல் அருகே கடற்கரையில் அரிய வகை திமிங்கலப் புள்ளி சுறா ஒன்று கரை ஒதுங்கியது. இது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், குளச்சல் ‘ஏ’ கிராமத்திற்கு உட்பட்ட கொட்டில்பாடு கடற்கரை பகுதியில் இன்று பெரிய அளவிலான திமிங்கலப் புள்ளி சுறா  ஒன்று கரை ஒதுங்கியது. இதனைப் பார்த்த உள்ளூர் மக்கள் மற்றும் மீனவர்கள் உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து உள்ளூர் மீனவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாகக் கடலில் ஏற்பட்டுள்ள நீரோட்ட மாற்றங்கள் மற்றும் அலைகளின் சீற்றம் காரணமாக, இவ்வகை கடல் உயிரினங்கள் திசைமாறி கரைக்கு நெருங்கி வந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

திமிங்கலப் புள்ளி சுறாக்கள் அளவில் பெரியவையாக இருந்தாலும், அவை மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்காதவை. இவை இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

கரை ஒதுங்கிய இந்த சுறா உயிருடன் உள்ளதா அல்லது இறந்த நிலையில் உள்ளதா என்பது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory