» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டவிரோத மது விற்பனை: வாலிபர் கைது; 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்!
வெள்ளி 1, மே 2026 7:37:00 PM (IST)
கோவில்பட்டி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஒருவரை இன்று கைது செய்தனர்.
கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மீகா மற்றும் போலீசார் இன்று கயத்தாறு மற்றும் அய்யனார் ஊத்து பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அய்யனார் ஊத்து பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், அவர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ராஜா (35) என்பது தெரியவந்தது. மேலும், அவர் அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 562 மது பாட்டில்கள், ரொக்கப் பணம் ரூ.1,600 மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர் கைது!
வெள்ளி 1, மே 2026 12:50:09 PM (IST)

தூத்துக்குடியில் கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் மதுபாட்டில்கள் விற்பனை - ஒருவர் கைது
வெள்ளி 1, மே 2026 12:16:02 PM (IST)

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 1, மே 2026 11:51:27 AM (IST)

வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத உயர்வு : இன்று முதல் அமல்!
வெள்ளி 1, மே 2026 10:21:34 AM (IST)

கன்னியாகுமரி கடலில் அமெரிக்க வாழ் சகோதரிகள் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை
வெள்ளி 1, மே 2026 8:53:57 AM (IST)

மின்சாரம் தாக்கி 2 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி: நுங்கு பறிக்க முயன்றபோது சோகம்!
வெள்ளி 1, மே 2026 8:48:22 AM (IST)


