» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பனையூரில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம்: தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்வு!
செவ்வாய் 5, மே 2026 3:40:03 PM (IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அக்கட்சி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று தவெக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றக் குழு தலைவராக விஜய்யைத் ஒருமனதாகத் தேர்வு செய்தனர். மேலும், விஜய் முதல்வராக ஆதரவு தெரிவித்து உறுதிமொழி பத்திரத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கையெழுத்திட்டனர்.
ஏற்கனவே ஆட்சியமைக்க ஆளுநருக்குத் தவெக தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பான்மைக்குக் குறைவான இடங்களே உள்ள நிலையில், ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆதரவைத் திரட்ட சில கட்சிகளுடன் விஜய் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆளுநர் அழைப்பு விடுப்பாரா அல்லது கூட்டணி ஆதரவுடன் விஜய் ஆட்சியமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெரியகருப்பன் தோல்வி : வழக்கு தொடர உதயநிதி ஸ்டாலின் முடிவு
செவ்வாய் 5, மே 2026 5:20:51 PM (IST)

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நிற்போம்: விஜய் தலைமையிலான அரசுக்கு சீமான் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 4:44:59 PM (IST)

வெற்றி - தோல்வியை சமமாகக் கருதி லட்சியப் பயணத்தை தொடருவோம்: கீதாஜீவன் அறிக்கை!
செவ்வாய் 5, மே 2026 3:27:53 PM (IST)

விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை- நல்லபடியாக ஆட்சி அமைக்கட்டும்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
செவ்வாய் 5, மே 2026 12:25:58 PM (IST)

பயணத்தைத் தொடர்வோம். மீண்டும் வெல்வோம் - தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!
செவ்வாய் 5, மே 2026 11:56:41 AM (IST)

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்!
செவ்வாய் 5, மே 2026 10:50:08 AM (IST)


