» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி : திமுக ஆதரவா? ஸ்டாலின் ஆலோசனை!
வெள்ளி 8, மே 2026 11:35:06 AM (IST)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விரைவில் ஆட்சி அமையும் என்று தம்பிதுரை கூறினார்.
பசுமை வழிச்சாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபின் எம்பி தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விரைவில் ஆட்சி அமையும்.மக்களுக்கான நல்லாட்சியை இபிஎஸ் தருவார். ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. கடவுள் ஆசிர்வாதத்தில் நல்லதே நடக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்கிறதா என்ற கேள்விக்கு பதில் கூற மறுப்பு தெரிவித்தார்.
திமுக ஆதரவா? ஸ்டாலின் ஆலோசனை!
திமுக தலைவர் ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன், கனிமொழி, பொன்முடி, எ.வ.வேலு, டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இதனால் அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகக் கனிம வளங்களை அழிக்க பாஜக சதி? சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் கண்டனம்!
வெள்ளி 8, மே 2026 9:03:22 PM (IST)

தமிழக முதல்வராகிறார் விஜய்: 118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் ஆளுநரைச் சந்தித்து உரிமை கோரினார்!
வெள்ளி 8, மே 2026 8:11:36 PM (IST)

காங்கிரஸ் ஒரு ஆபத்தான கட்சி: விஜய்க்கு அர்ஜுன் சம்பத் பகிரங்க எச்சரிக்கை!
வெள்ளி 8, மே 2026 4:43:35 PM (IST)

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புதிய திருப்பம்: விஜய்க்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு
வெள்ளி 8, மே 2026 3:59:57 PM (IST)

பிளஸ் 2 தேர்ச்சியில் மாநில அளவில் 3-ம் இடம்: கல்வி அதிகாரிக்கு இனிப்பு வழங்கிய ஆட்சியர்!
வெள்ளி 8, மே 2026 3:55:19 PM (IST)

காங்கிரஸ் கட்சியினரை விரட்டியடித்த திமுகவினர் - தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு!
வெள்ளி 8, மே 2026 3:48:25 PM (IST)



Balaமே 8, 2026 - 12:06:44 PM | Posted IP 162.1*****