» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எடப்பாடி பழனிசாமிக்கு மரியாதையை செய்ய தவறினாரா விஜய்? சமூக வலைதளங்களில் வைரல்!
திங்கள் 11, மே 2026 12:01:56 PM (IST)

தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் விஜய் மரியாதை செய்ய தவறிவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று(மே 11) காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்வான உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாகப் பதவியேற்றனர். இடைக்கால அவைத் தலைவர் சோழவந்தான் கருப்பையா உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதலில் முதல்வர் சி. ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் மற்ற உறுப்பினர்களும் பதவியேற்று வருகின்றனர். அதிமுகவில் இருந்து பிரிந்து விஜய்யின் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் தனது கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இம்முறை தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் பதவிப் பிரமாண ஏற்பு விழாவின்போது, முதல்வர் விஜய் வெளிப்படுத்தும் எதிர்வினைகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி பேரவையில் முதல்வர் விஜய்யை பார்த்து கைகூப்பி வணக்கம் செலுத்திபோது விஜய் அவருக்கு பதில் வணக்கம் செலுத்தவில்லை. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்!
திங்கள் 11, மே 2026 3:32:24 PM (IST)

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிக்கு ஸ்கூட்டர் பரிசளித்த பி.டி. செல்வகுமார்!
திங்கள் 11, மே 2026 12:44:50 PM (IST)

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முதல்வர் விஜய் திட்டம்!
திங்கள் 11, மே 2026 12:24:01 PM (IST)

விஜய்யின் 200 யூனிட் இலவச மின்சாரம்: யாருக்கு லாபம்? யாருக்கு ஏமாற்றம்? - முழு விபரம்!
திங்கள் 11, மே 2026 11:24:51 AM (IST)

தூத்துக்குடி உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
திங்கள் 11, மே 2026 11:17:00 AM (IST)

17-ஆவது சட்டப்பேரவை கூடியது: முதல்வர் விஜய் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பேற்பு!
திங்கள் 11, மே 2026 10:45:41 AM (IST)


