» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எடப்பாடியாருக்கு தூத்துக்குடி அதிமுக முழு ஆதரவு: எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் தீர்மானம்!
திங்கள் 18, மே 2026 10:11:13 AM (IST)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதிப்பதற்காக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிமுக தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், எடப்பாடி கே.பழனிசாமியின் ஒற்றைத் தலைமைக்குத் தங்களது முழுமையான மற்றும் 100 சதவீத ஆதரவை வெளிப்படுத்தும் முக்கிய அரசியல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கழகத்தை இக்கட்டான காலகட்டங்களிலும் மிகத் துணிச்சலோடு வழிநடத்தி, தொண்டர்களின் அரணாக விளங்கும் எடப்பாடி கே.பழனிசாமியே கட்சியின் பொதுச்செயலாளராகத் தொடர்ந்து நீடித்து வழிநடத்த வேண்டும் என்று கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், தேர்தல் முடிவுகளைக் கடந்து, களத்தில் தொண்டர்களை ஒருங்கிணைத்து மக்கள் பணிகளைத் தொய்வின்றித் தொடரவும், கழகத்தை அடுத்தகட்ட எழுச்சிக்குக் கொண்டு செல்லவும் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என எஸ்.பி. சண்முகநாதன் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக முக்கிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டு தங்களது ஆதரவை முழங்கினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவள்ளூரில் 3 வயது குழந்தை பாலியல் படுகொலை சம்பவம்: காவல்துறை விளக்கம்
திங்கள் 15, ஜூன் 2026 12:50:36 PM (IST)

கப்பல் கட்டும் தளம் திட்டத்தில் முதல்வர் சரியான முடிவெடுப்பார்: தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் பேட்டி!
திங்கள் 15, ஜூன் 2026 12:38:31 PM (IST)

ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை விடுவிப்பு : தவெக ஆட்சியில் 2வது முறை!
திங்கள் 15, ஜூன் 2026 12:33:25 PM (IST)

3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை படுகொலை - தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
திங்கள் 15, ஜூன் 2026 12:30:12 PM (IST)

உயிரிழந்த கணவரின் சடலத்துடன் 3 நாட்களாக வீட்டிற்குள் முடங்கிய மனைவி, மகள்!
திங்கள் 15, ஜூன் 2026 12:27:22 PM (IST)

கவின் கொலை வழக்கில் 2வது குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு - தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
திங்கள் 15, ஜூன் 2026 12:22:57 PM (IST)


