» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மே 21-ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 18, மே 2026 11:16:08 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மே மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்’ வரும் 21-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், பாசன வசதிகள் மற்றும் வேளாண் சார்ந்த கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு, 2026 மே மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்’ வரும் 21-05-2026 (வியாழக்கிழமை) அன்று காலை 10:00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள "முத்து அரங்கத்தில்" வைத்து நடைபெற உள்ளது.இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கோரிக்கை மனுக்களைப் பெற்று விசாரணை நடத்த உள்ளார். மேலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வரத்து) மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் முதன்மை அதிகாரிகளும் இக்கூட்டத்தில் நேரில் பங்கேற்கின்றனர்.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயப் பெருமக்கள், உழவர் சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் இக்கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, தங்கள் பகுதி விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகள், பயிர்ச் சாகுபடி தேவைகள் மற்றும் பாசனக் கால்வாய் முறையீடுகள் குறித்த கோரிக்கைகளைத் தெரிவித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவள்ளூரில் 3 வயது குழந்தை பாலியல் படுகொலை சம்பவம்: காவல்துறை விளக்கம்
திங்கள் 15, ஜூன் 2026 12:50:36 PM (IST)

கப்பல் கட்டும் தளம் திட்டத்தில் முதல்வர் சரியான முடிவெடுப்பார்: தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் பேட்டி!
திங்கள் 15, ஜூன் 2026 12:38:31 PM (IST)

ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை விடுவிப்பு : தவெக ஆட்சியில் 2வது முறை!
திங்கள் 15, ஜூன் 2026 12:33:25 PM (IST)

3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை படுகொலை - தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
திங்கள் 15, ஜூன் 2026 12:30:12 PM (IST)

உயிரிழந்த கணவரின் சடலத்துடன் 3 நாட்களாக வீட்டிற்குள் முடங்கிய மனைவி, மகள்!
திங்கள் 15, ஜூன் 2026 12:27:22 PM (IST)

கவின் கொலை வழக்கில் 2வது குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு - தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
திங்கள் 15, ஜூன் 2026 12:22:57 PM (IST)


