» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 28, மே 2026 8:29:39 PM (IST)

கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடத்தல்காரர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். எனினும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் போலீஸார் தினமும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து புறப்பட்ட விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் வந்தது. இந்த ரயில் முந்தைய நாள் இரவு 9 மணிக்கே நாகர்கோவில் வந்திருக்க வேண்டும். ஆனால், சுமார் 8 மணி நேரம் தாமதமாக வந்துள்ளது.
பின்னர் இந்த ரயில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்ட போது, ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இணைந்து ரயிலில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி ஒன்றில் போலீஸார் சோதனை நடத்தியபோது, அங்குள்ள ஒரு இருக்கையின் கீழே கேட்பாரற்ற நிலையில் ஒரு பை கிடந்தது. அந்தப் பெட்டியில் இருந்த பயணிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், அந்தப் பை யாருடையது என்று யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அந்தப் பையை திறந்து பார்த்தனர்.
அப்போது அதற்குள் 10 பொட்டலங்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது, அவை அனைத்தும் கஞ்சா என்பது உறுதி செய்யப்பட்டது. தலா ஒரு கிலோ எடை கொண்ட 10 கஞ்சா பாக்கெட்டுகள் அதில் இருந்தன. இதையடுத்து அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இந்த கஞ்சாவை கடத்தி வந்தது யார்? குமரி மாவட்டத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதா? அல்லது இடையில் வேறு மாவட்டத்தில் இறக்க முடியாமல் போனதால் நேராக குமரிக்கு வந்து சேர்ந்ததா? என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்: தமிழக அரசு உத்தரவு!
வெள்ளி 29, மே 2026 5:40:13 PM (IST)

தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியதாக தவெக மீது வழக்கு: ஜூலை 1-க்கு ஒத்திவைப்பு
வெள்ளி 29, மே 2026 5:15:50 PM (IST)

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே? டீப் ஸ்லீப் மோடில் முதல்வர் - உதயநிதி அட்டாக்!
வெள்ளி 29, மே 2026 4:54:05 PM (IST)

இரத்த தானம் வழங்குவதில் மருத்துவ பணியாளர்கள் முன்மாதிரி : அமைச்சர் ராஜேஷ் குமார் பெருமிதம்!
வெள்ளி 29, மே 2026 3:59:42 PM (IST)

முதல்வரின் உடையில் திடீர் மாற்றம்: பட்டு வேட்டி, சட்டையில் தலைமைச் செயலகம் வந்தார்!
வெள்ளி 29, மே 2026 12:35:02 PM (IST)

மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தாயார் கைது!
வெள்ளி 29, மே 2026 12:28:36 PM (IST)


