» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!

புதன் 3, ஜூன் 2026 10:28:33 AM (IST)



கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. தி.மு.க. சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி, மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர் அண்ணா அறிவாலயம் முன்பு கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அவருடன் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தி.மு.க. இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் பெரியார். அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உரு வச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. இந்த 3 தலைவர்களின் சிலைகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory