» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் கார் விபத்தில் மூத்த வழக்கறிஞர் பலி : பைப் லைன் குழாய்கள் மீது கார் மோதி பரிதாபம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 10:54:31 AM (IST)

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாலப் பணிகள் நடைபெறும் பகுதியில், கார் விபத்துக்குள்ளானதில் மூத்த வழக்கறிஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம், சுந்தர் நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ் மகன் வேதநாயகம் (54). இவர் தூத்துக்குடியில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இவர் தனது ஹோண்டா அமேஸ் காரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெம்பூர் காலனி என்ற பகுதியின் அருகே தற்பொழுது புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் பாதுகாப்பாகச் செல்வதற்காக மாற்றுப்பாதையில் செல்லவும் ('TAKE DIVERSION') என்ற தற்காலிக எச்சரிக்கை அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. காரை ஓட்டிச் சென்ற வேதநாயகம், எதிர்பாராதவிதமாகச் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அந்த மாற்றுப்பாதை அறிவிப்புப் பலகையைக் கவனிக்கத் தவறி, காரை அதிவேகமாக நேராகவே செலுத்தியுள்ளார்.
இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து, அந்த எச்சரிக்கைப் பலகையின் பின்புறமாகப் பாதுகாப்புக்காக அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த மாபெரும் இரும்புத் தண்ணீர் பைப் லைன் குழாய்களின் மீது மிக பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த மிகக் கொடூரமான மோதலின் வேகத்தில், காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. காரை ஓட்டிச் சென்ற வழக்கறிஞர் வேதநாயகத்தின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விபத்து நடைபெற்ற தேசிய நெடுஞ்சாலைப் பகுதிக்கு விரைந்து வந்த மாசர்பட்டி காவல் துறையினர், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த வழக்கறிஞரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனத்தைப் பறிமுதல் செய்த மாசர்பட்டி காவல் துறையினர், இந்த விபத்துச் சம்பவம் குறித்துச் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவள்ளூரில் 3 வயது குழந்தை பாலியல் படுகொலை சம்பவம்: காவல்துறை விளக்கம்
திங்கள் 15, ஜூன் 2026 12:50:36 PM (IST)

கப்பல் கட்டும் தளம் திட்டத்தில் முதல்வர் சரியான முடிவெடுப்பார்: தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் பேட்டி!
திங்கள் 15, ஜூன் 2026 12:38:31 PM (IST)

ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை விடுவிப்பு : தவெக ஆட்சியில் 2வது முறை!
திங்கள் 15, ஜூன் 2026 12:33:25 PM (IST)

3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை படுகொலை - தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
திங்கள் 15, ஜூன் 2026 12:30:12 PM (IST)

உயிரிழந்த கணவரின் சடலத்துடன் 3 நாட்களாக வீட்டிற்குள் முடங்கிய மனைவி, மகள்!
திங்கள் 15, ஜூன் 2026 12:27:22 PM (IST)

கவின் கொலை வழக்கில் 2வது குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு - தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
திங்கள் 15, ஜூன் 2026 12:22:57 PM (IST)



Oo. KanagalakshmiJun 9, 2026 - 03:12:33 PM | Posted IP 172.7*****