» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: துரை வைகோ
ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:26 AM (IST)
எந்தவொரு நிர்வாகப் பிரச்சினையையும் தீர்ப்பதற்குப் புதிய அரசுக்குக் குறைந்தபட்சம் 6 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும். அதே வேளையில், மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று துரை வைகோ கூறினார்.
துபாயில் எலக்ட்ரீசியன் வேலைக்குச் சென்று போதிய ஊதியம் கிடைக்காமல் தவித்த தூத்துக்குடி மாவட்டம், வில்லிச்சேரியைச் சேர்ந்த பவுன்ராஜ் உள்ளிட்ட 5 இளைஞர்களைத் தாயகம் அழைத்து வரத் துரை வைகோ உதவினார். நேற்று (சனிக்கிழமை) வில்லிச்சேரி கிராமத்திற்கு நேரில் சென்ற அவர், மீட்கப்பட்ட இளைஞர்களைச் சந்தித்துப் பேசினார். அவருக்குக் கிராம மக்களும், பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ கூறியதாவது: "வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், தங்களை அழைத்துச் செல்லும் முகவர்கள் மற்றும் நிறுவனங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டவையா என்பதை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும். அதைத் தவறவிட்டால், அந்நாடுகளில் வாக்குறுதி அளிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படாமல், கூடுதல் பணிச்சுமையுடன் ஏமாற்றப்படும் சூழல் ஏற்படலாம். இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது." என்றார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரும் குற்றச்சம்பவங்கள் தொடர்வது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "போதைப்பொருள் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தப் புதிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையை அமைத்து, பாதுகாப்பான சூழலை உருவாக்க அரசு முனைப்பு காட்டுகிறது. எந்தவொரு நிர்வாகப் பிரச்சினையையும் தீர்ப்பதற்குப் புதிய அரசுக்குக் குறைந்தபட்சம் 6 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும். அதேவேளையில், மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்" என்றார்.
திமுக மகளிர் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துகள் குறித்த கேள்விக்கு, "அது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கு உரிய அரசுதான் பதில் அளிக்கும்" என்று சுருக்கமாகக் குறிப்பிட்டார். இந்த நிகழ்வின் போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ஜி. ரமேஷ், நகரச் செயலாளர் பால்ராஜ் மற்றும் குருவிகுளம் ஒன்றியக் குழுத் தலைவி விஜயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுகவிலிருந்து விலகினார் நடிகை கௌதமி: எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 1:03:58 PM (IST)

தூக்குத்தண்டனை கைதிகளுக்குச் சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்க கோரிய மனு தள்ளுபடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 9:06:46 AM (IST)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், பாஜக விஜயதரணி த.வெ.க.வில் ஐக்கியம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:59:11 AM (IST)

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்குத் தொல்லை : போலீஸ் ஏட்டு அதிரடி பணி இடைநீக்கம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:55:01 AM (IST)

ரஜினிகாந்த் பெயர், புகைப்படத்தை அமைப்புகளுக்குப் பயன்படுத்தத் தடை: தலைமை ரசிகர் மன்றம் அறிக்கை
ஞாயிறு 14, ஜூன் 2026 8:47:41 AM (IST)

வெறும் கம்பமாக நிற்கும் செக்போஸ்ட் சிசிடிவி : ஆவணங்களின்றிப் பறக்கும் லாரிகள்!
சனி 13, ஜூன் 2026 9:21:41 PM (IST)


