» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
புதன் 24, ஜூன் 2026 4:04:08 PM (IST)

"நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது" என்று 'தர்மன்' படத்தின் தலைப்பு வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173-ஆவது திரைப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 'ரஜினி 173' படத்திற்கு ‘தர்மன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'டிராகன்' படப் புகழ்பெற்ற இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கவுள்ளார்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: "நான் பேசினாலே அது எனக்கும் பிரச்சினை, உங்களுக்கும் பிரச்சினை ஆகிவிடுகிறது. பேசாமல் இருந்தால் வாயில் கொழுக்கட்டை இருக்கிறதா என்கிறார்கள். பேசினால், ‘இப்பப் பேசு’ என்கிறார்கள். எனக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் ஒரு உண்மை தெரிந்தது; நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. அதேபோல, நம்மைப் பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம். எனவே, எப்போதும் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்.
இப்படத்திற்கு நான்காவது இயக்குநராக அஸ்வத் இணைந்துள்ளார். முதலில் ரவிக்குமார், பின்னர் சுந்தர் சி, அதன்பிறகு சிபி சக்கரவர்த்தி என மாறி கடைசியாக அஸ்வத் இயக்க வந்துள்ளார். சிபி சொன்ன அணு விஞ்ஞானி சம்பந்தப்பட்ட கதை மிகவும் சென்சிட்டிவ் என்பதால், அதற்குத் கூடுதல் நேரம் தேவைப்படும் எனக் கருதி தள்ளி வைத்துள்ளோம். அஸ்வத் மாரிமுத்துவின் 'டிராகன்' படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 'பேட்ட' திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் சிம்ரனுடன் இப்படத்தில் நடிக்கிறேன்.
கமல்ஹாசனுடனான எனது நட்பு பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவர் செய்த உதவிகளும் ஊக்கமும் அளப்பரியவை. 1975-களில் கமல் பெரிய நட்சத்திரமாக இருந்தபோதுதான் நான் சினிமாவுக்கு வந்தேன். ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் முதலில் ஜெய்கணேஷ் நடிக்க வேண்டிய வேடத்தில், கமல் பரிந்துரைத்ததால்தான் இயக்குநர் ஸ்ரீதர் என்னை நடிக்க வைத்தார்" இவ்வாறு ரஜினிகாந்த் தனது திரையுலக நினைவுகளைப் பகிர்ந்து பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 24, ஜூன் 2026 9:58:18 PM (IST)

முதலமைச்சர் விஜயின் பேச்சு ஆணவத்தின் உச்சம்: திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்!
புதன் 24, ஜூன் 2026 8:49:49 PM (IST)

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!
புதன் 24, ஜூன் 2026 8:39:42 PM (IST)

வழக்குகள் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது : அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சவால்!
புதன் 24, ஜூன் 2026 5:53:38 PM (IST)

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு!
புதன் 24, ஜூன் 2026 5:18:13 PM (IST)

மாமன்றத்தில் த்ரிஷா படத்தை வைக்க வேண்டும் : சுயேச்சை கவுன்சிலர் கோரிக்கையால் பரபரப்பு
புதன் 24, ஜூன் 2026 4:49:43 PM (IST)


