» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் மாங்கனித் திருவிழா: காரைக்கால் அம்மையாருக்கு அபிஷேகம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:37:32 AM (IST)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் காரைக்கால் அம்மையாரின் வரலாற்று நிகழ்வை ஒட்டி மாங்கனித் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது.
63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார், இறைவன் அருளால் பெற்ற மாங்கனியைத் தனது கணவருக்கு வழங்கிய நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் வளாகத்தில் உள்ள 63 நாயன்மார்கள் சன்னதியில் நேற்று இரவு மாங்கனி வரவழைத்தல் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து சன்னதியில் உள்ள காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகள் படைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மா, மஞ்சள், இளநீர், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்களுக்கு மாங்கனி பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதேபோல், கோவில்பட்டி மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலிலும் நேற்று இரவு மாங்கனித் திருவிழா நடைபெற்றது. அங்கிருந்த காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகள் படைக்கப்பட்டு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதிலும் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். பங்கேற்ற அனைவருக்கும் மாங்கனி பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 1 முதல் கைபேசி தடை உத்தரவு மேலும் தீவிரம்; மீறினால் பறிமுதல்!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:28:30 PM (IST)

அதிமுகவில் இருந்து கண்ணீருடன் விடைபெறுகிறேன்: எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:19:59 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ரயில் நிலையங்கள் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:02:57 PM (IST)

ஆராய்ச்சிப் பணிக்காக ரேடியோ காலர் பொருத்தப்பட்ட கழுகு மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 4:55:29 PM (IST)

தூத்துக்குடி மர அறுவை ஆலையில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள மரங்கள் சேதம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 4:34:45 PM (IST)

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தொடர்வார்: வைகோ நம்பிக்கை - திமுக மீது கடும் விமர்சனம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 3:47:32 PM (IST)


