» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திரிவேணி சங்கம் கடற்கரையில் கலைத் திருவிழா நிறைவு: பாரம்பரியக் கலைஞர்களுக்கு பாராட்டு!
புதன் 1, ஜூலை 2026 10:34:10 AM (IST)

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரையில் ஐந்து நாட்கள் நடைபெற்ற மாபெரும் "குமரி கலை விழா" நேற்றுடன் (ஜூன் 30) நிறைவு பெற்றது.
தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கும் நோக்கோடும், மாவட்டச் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையிலும் இக்கலை விழா ஒருங்கிணைக்கப்பட்டது. கடந்த ஜூன் 26 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் இக்கலை விழாவை முறைப்படி துவக்கி வைத்தார். ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமன்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தமிழர்களின் பாரம்பரிய மண்ணின் கலைகளைக் கண்டு களித்தனர்.
நேற்று நடைபெற்ற நிறைவுநாள் விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, கலை நிகழ்ச்சிகளை நடத்திய பாரம்பரியக் கலைஞர்களுக்கு நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். அவர் தனது உரையில், "பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை கண்ணாடி இழைப்பாலம், காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், மாத்தூர் தொட்டிப் பாலம் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனை போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களை அனைவரும் பார்வையிட்டுப் புத்துணர்ச்சி பெற வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் ஜென்சி, பூம்புகார் போக்குவரத்து கழக மேலாளர் முருகபூபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வலெட் சுஷ்மா உட்படத் துறை அதிகாரிகள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே ஒரு மாணவிக்கு ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் இரண்டு ஆசிரியர்கள் : கிராம மக்கள் குற்றச்சாட்டு!
புதன் 1, ஜூலை 2026 5:22:46 PM (IST)

குதிரை பேரத்தில் ஈடுபடும் முதல்வர் விஜய் மீது நடவடிக்கை: ஆளுநரிடம் திமுக கோரிக்கை!
புதன் 1, ஜூலை 2026 5:08:49 PM (IST)

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் 3 பேர் அதிரடி கைது... பரபரப்புத் தகவல்கள்!
புதன் 1, ஜூலை 2026 4:25:13 PM (IST)

கன்னியாகுமரி அணுக்கனிம திட்டத்திற்கு ஓராண்டு கால நீட்டிப்பு: கனிமொழி எம்பி கண்டனம்!
புதன் 1, ஜூலை 2026 4:09:33 PM (IST)

தேசிய மருத்துவர்கள் தின விழா: டாக்டர் பி.எஸ். ராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
புதன் 1, ஜூலை 2026 3:43:35 PM (IST)

முதல்வர் விஜய் குறித்த அவதூறு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்ஜாமீன் மனு தாக்கல்!
புதன் 1, ஜூலை 2026 12:34:03 PM (IST)


