» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேசிய மருத்துவர்கள் தினம் : மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணி - முதல்வர் விஜய் வாழ்த்து!
புதன் 1, ஜூலை 2026 12:11:58 PM (IST)
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவப் பெருமக்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வாழ்த்துப் பதிவில், "மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு பகல் பாராது, அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் ஆகியவை என்றும் போற்றத்தக்கவை ஆகும்.மருத்துவச் சிகிச்சை பெறுபவர்களின் முகத்தில் புன்னகையையும், அவர்தம் குடும்பங்களில் புதிய நம்பிக்கையையும் விதைக்கும் மருத்துவர்கள், எப்போதும் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற்றுத் தங்களின் மக்கள் சேவையைத் தொடர்ந்து ஆற்றிட இந்நாளில் வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே ஒரு மாணவிக்கு ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் இரண்டு ஆசிரியர்கள் : கிராம மக்கள் குற்றச்சாட்டு!
புதன் 1, ஜூலை 2026 5:22:46 PM (IST)

குதிரை பேரத்தில் ஈடுபடும் முதல்வர் விஜய் மீது நடவடிக்கை: ஆளுநரிடம் திமுக கோரிக்கை!
புதன் 1, ஜூலை 2026 5:08:49 PM (IST)

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் 3 பேர் அதிரடி கைது... பரபரப்புத் தகவல்கள்!
புதன் 1, ஜூலை 2026 4:25:13 PM (IST)

கன்னியாகுமரி அணுக்கனிம திட்டத்திற்கு ஓராண்டு கால நீட்டிப்பு: கனிமொழி எம்பி கண்டனம்!
புதன் 1, ஜூலை 2026 4:09:33 PM (IST)

தேசிய மருத்துவர்கள் தின விழா: டாக்டர் பி.எஸ். ராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
புதன் 1, ஜூலை 2026 3:43:35 PM (IST)

முதல்வர் விஜய் குறித்த அவதூறு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்ஜாமீன் மனு தாக்கல்!
புதன் 1, ஜூலை 2026 12:34:03 PM (IST)


