» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூரில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

வியாழன் 2, ஜூலை 2026 4:14:27 PM (IST)

TiruchendurCollectori.jpg

திருச்செந்தூர் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.18 கோடியில் புதிய பேருந்து நிலையம் உள்பட வரும் பல்வேறு முக்கிய மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதிக்கு வரும் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் ஆன்மீகப் பயணிகளின் வசதிக்காக, நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரூ.18 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டார். 

அப்போது, பணிகளின் தற்போதைய தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்த அவர், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை விரைந்து முடித்துப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, திருச்செந்தூர் - திருநெல்வேலி சந்திப்புச் சாலையில் நடைபெற்று வரும் நகராட்சிப் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இச்சாக்கடைப் பணிகளால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது நகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அரசுப் பணியாளர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory