» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொதுமக்களுக்குப் பாதுகாப்பே இல்லை: கனிமொழி எம்பி கடும் கண்டனம்!
வெள்ளி 3, ஜூலை 2026 12:12:51 PM (IST)
வீரவநல்லூர் அருகே தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது கடுமையான கண்டனத்தையும் வேதனையையும் பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: "திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தையும் அவரது 5 வயது மகனும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தற்போது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்கெட்டுவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிட்டது.முன்விரோதம் காரணமாகத் தொடர்ந்து நீடித்து வரும் இப்பிரச்சனையில் தற்போதைய அரசு மெத்தனமாகச் செயல்படக் கூடாது. இ கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை எவ்விதத் தாமதமும் இன்றி விரைந்து கைது செய்ய வேண்டும். மேலும், பதற்றம் நிலவும் அப்பகுதியில் மீண்டும் அமைதி திரும்புவதற்கான அனைத்துத் தேவையான நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி சோதனையில் ரூ.7.49 லட்சம் ரொக்கம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை!
வெள்ளி 3, ஜூலை 2026 7:27:38 PM (IST)

குதிரை பேர விவகாரத்திற்கு முதலமைச்சர் விஜய் சிபிஐ விசாரணை கேட்பாரா? அப்பாவு கேள்வி!
வெள்ளி 3, ஜூலை 2026 5:16:19 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை!
வெள்ளி 3, ஜூலை 2026 4:59:24 PM (IST)

ஆட்சியைக் கவிழ்க்கச் சதித் திட்டம்: செந்தில் பாலாஜியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!
வெள்ளி 3, ஜூலை 2026 3:55:01 PM (IST)

கோயில்களில் முறைகேடு, லஞ்சம் புகார் அளிக்க அமைச்சர் இ-மெயில் முகவரி வெளியீடு!
வெள்ளி 3, ஜூலை 2026 12:45:54 PM (IST)

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: ஆதரவாளர்கள் முற்றுகை - மறியல் - பரபரப்பு!
வெள்ளி 3, ஜூலை 2026 12:16:44 PM (IST)


