» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுகவும் தவெகவும் இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும் : அமைச்சர் வன்னிஅரசு பேட்டி!
திங்கள் 13, ஜூலை 2026 7:46:22 AM (IST)

பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் திமுகவும் தவெகவும் இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும் எனத் தமிழக சமூக நீதித் துறை அமைச்சர் வன்னிஅரசு தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வன்னிஅரசு, விசிக அனைவருடனும் நட்பில் உள்ளதாகக் குறிப்பிட்டார். பாஜக சநாதன, சமூக விரோதக் கருத்துகளையும் மக்களைப் பிரிக்கும் கொள்கையையும் கொண்டுள்ளதால் அக்கட்சியைக் கொள்கை எதிரி எனக் கருதுவதாகவும், அதேபோலத்தான் பாமகவையும் எதிர்ப்பதாகவும் விளக்கினார்.
ஒரே நாடு, ஒரே மொழி என்ற ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவருவதும், மாநில உரிமை பேசும் கட்சிகளை அழித்தொழிப்பதும்தான் பாஜகவின் இலக்கு என்பதால், நாட்டின் நன்மை மற்றும் ஒற்றுமைக்காகப் பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் திமுகவும் தவெகவும் கூட்டணியில் இணைய வேண்டும் என வலியுறுத்தினார்.
தவெகவை எதிர்ப்பதற்காக திமுகவும் அதிமுகவும் இணைவதை யாரும் ஏற்கமாட்டார்கள் எனத் தெரிவித்த அவர், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றோரை மீண்டும் இணைத்து அக்கட்சி வலிமை பெற வேண்டும் என்பதுதான் விசிகவின் நிலைப்பாடு என்றார். விசிக மற்றும் இடதுசாரிகள் ஆதரவுடன் தவெக ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக ஐந்து ஆண்டுகள் தடையின்றித் தொடரும் என உறுதிபடக் கூறினார்.
ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையிலான குழுவினர், தரவுகளைச் சேகரிக்க மேலும் ஒன்பது மாதங்கள் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளனர். அக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது குறித்துத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நல்ல முடிவை எடுப்பார் எனத் தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து விசிக கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உயர்நிலைக் கூட்டத்தைக் கூட்டி முறைப்படி அறிவிப்பார் எனக் குறிப்பிட்ட அமைச்சர், தமிழ்நாடு முழுவதும் சமூக நீதி விடுதிகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கோவில்பட்டியில் சமூக நீதி விடுதி கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இச்சந்திப்பின் போது தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் முருகன், வழக்கறிஞரணி மாநிலத் துணைச் செயலாளர் பெஞ்சமின் பிராங்க்ளின் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வரதட்சணை நகைகளைத் திரும்பக் கேட்ட தாய் : காவல் நிலையத்தில் புதுப்பெண் அதிரடிப் புகார்!
திங்கள் 13, ஜூலை 2026 4:58:41 PM (IST)

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்!
திங்கள் 13, ஜூலை 2026 4:02:29 PM (IST)

பனையூரை தேசிய புவி-பாரம்பரிய பூங்காவாக அறிவிக்க வேண்டும் - மத்திய அரசுக்குக் கோரிக்கை!
திங்கள் 13, ஜூலை 2026 3:49:24 PM (IST)

மகளிர் விளையாட்டு விடுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு: வீராங்கனைகளுடன் கலந்துரையாடல்!
திங்கள் 13, ஜூலை 2026 12:54:36 PM (IST)

திருநெல்வேலி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் வழித்தடத்தில் நேரடி இரயில் இயக்க கோரிக்கை!
திங்கள் 13, ஜூலை 2026 12:12:25 PM (IST)

2031-ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம்: பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை உறுதி!
திங்கள் 13, ஜூலை 2026 11:53:56 AM (IST)



கந்தசாமிJul 13, 2026 - 01:02:43 PM | Posted IP 104.2*****