» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 16-ஆம் தேதி வரை வெயில் அதிகரிக்கும்: வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் உயர வாய்ப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:28:17 PM (IST)

தமிழகத்தில் ஜூலை 16-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வானிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், ஜூலை 14 முதல் ஜூலை 16 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களைத் தவிர்த்து, இதர தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மழை முன்னறிவிப்பு விபரம்:
• ஜூலை 14, 15: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
• ஜூலை 16 முதல் 19 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும், இதர தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஜூலை 14 காலை 8:30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரக் கணக்கீட்டின்படி தமிழகத்தில் எங்கும் மழைப் பதிவு பதிவாகவில்லை.
கடலோரப் பகுதி நிலவரம்: தமிழகக் கடலோரப் பகுதிகளில் ஜூலை 14 முதல் ஜூலை 17 வரை மீனவர்களுக்கான பிரத்தியேக எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2,144 பேருக்குப் பணி நியமன ஆணைகள்: முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:55:43 PM (IST)

நீதிமன்றக் காவலில் சபரிவர்மன் மரணம்; காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதயநிதி வலியுறுத்தல்!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:43:12 PM (IST)

உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டி? மு.வீரபாண்டியன் விளக்கம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:36:53 PM (IST)

ஆண்டிபட்டி கிராமத்தில் எழுத்தாளர் பூமணியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
செவ்வாய் 14, ஜூலை 2026 5:10:32 PM (IST)

மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சம் மதிப்பில் நல உதவிகள்: கோ.ப.அன்பழகன் வழங்கினார்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:53:14 PM (IST)

இன்டர்சிட்டி ரயில் நீட்டிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் நிற்காமல் செல்லும் அவலம்: பயணிகள் வேதனை!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:44:34 PM (IST)


