» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் சிறை மரண வழக்கு: தலைமைக் காவலர் உட்பட 3பேர் கைது - பணியிடை நீக்கம்!
புதன் 15, ஜூலை 2026 11:35:33 AM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானதைத் தொடர்ந்து, சிறைக் காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் (33). இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். ஜூலை 9-ஆம் தேதி சபரிவர்மன் கடையில் புகையிலைப் பொருட்கள் வைத்திருந்ததாகக் கூறி போலீசார் அவரைத் தடுத்துக் காவலில் எடுத்து, நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் ஜூலை 13-ஆம் தேதி காலை மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, சிறை அலுவலர்கள் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சபரிவர்மனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோர் நாகர்கோவில் கிளைச் சிறையில் சிறைக் காவலர்கள் மற்றும் சக கைதிகளிடம் விசாரணை நடத்தினர்.
மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சபரிவர்மனின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதன் பிரேத பரிசோதனை அறிக்கையில், சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததும், அந்தப் பாதிப்புகளே அவரது மரணத்திற்குக் காரணம் என்பதும் உறுதியானது.
இதையடுத்து, இக்கொலை வழக்குத் தொடர்பாக நாகர்கோவில் கிளைச் சிறை தலைமைக் காவலர் ஜெகன், முதன்மை தலைமைக் காவலர் திருமலைநம்பி (திருவிடைநம்பி), சிறைக் காவலர் சிவகுமார் ஆகிய மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர் ஜெகன், காவலர்கள் சிவக்குமார், திருமலைநம்பி ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து நெல்லை மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் காமராஜர் 124-ஆவது பிறந்தநாள் விழா: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 4:30:22 PM (IST)

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்!
புதன் 15, ஜூலை 2026 12:20:08 PM (IST)

பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாள்: முதல்வர் ச.ஜோசப் விஜய் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 11:54:09 AM (IST)

தூத்துக்குடியில் அரசு மருத்துவர் தற்கொலை : வீடியோ காலில் மனைவியுடன் பேசிவிட்டு விபரீத முடிவு!
புதன் 15, ஜூலை 2026 10:42:51 AM (IST)

பாலியல் குற்றவாளி காசியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சாகும் வரை ஆயுள் தண்டனை உறுதி!
புதன் 15, ஜூலை 2026 8:34:25 AM (IST)

தமிழகத்தில் 2,144 பேருக்குப் பணி நியமன ஆணைகள்: முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:55:43 PM (IST)


