» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்குவாரி சேதங்கள் சீரமைக்கப்பட்டதா? ஆட்சியர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

வியாழன் 23, ஜூலை 2026 8:53:07 AM (IST)

உடன்குடி சுற்றுப்பகுதிகளில் கல்குவாரிகளால் ஏற்பட்ட சேதங்கள் சீரமைக்கப்பட்டனவா என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சிவலூரைச் சேர்ந்த முருகேசன் 2020-இல் தாக்கல் செய்த மனுவில், "குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட கடலோரக் கிராமங்களின் நீர்நிலைகளில் சவடு மண் எடுக்க அனுமதி பெற்று மணல் கடத்துகின்றனர். நீதிமன்றத் தடையையும் மீறி அனுமதி வழங்கப்படுவதால் உடன்குடி தாலுகாவில் மணல் கடத்தலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இவ் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகத் தலைமைச் செயலாளர், பல்வேறு அரசுத் துறைச் செயலாளர்களைத் தானாக முன்வந்து எதிர்மனுதாரர்களாகச் சேர்த்தது. உடன்குடி பஞ்சாயத்து பகுதிகளில் மணல் எடுப்பது தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆவணங்களுடன் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

ஆட்சியர் நடவடிக்கைக்குப் பாராட்டு:

நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில், சட்டவிரோத கல்குவாரி பணிகள் நிறுத்தப்பட்டு, ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆட்சியரின் இந் நடவடிக்கைகளை நீதிபதிகள் பெரிதும் பாராட்டினர்.

அதேநேரத்தில் உடன்குடி, மானாடுதண்டுபத்து, கலங்குடியிருப்பு, அத்தியாக்குறிச்சி ஆகிய கிராமங்களில் கல்குவாரிகளால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க மாவட்ட சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிதியைப் பயன்படுத்தியது குறித்துத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தனி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory