» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி தனசேகர் நகரில் டாஸ்மாக் தொல்லை: மதுப்பிரியர்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதி!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:45:15 AM (IST)

தூத்துக்குடி தனசேகர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையால் பொதுமக்கள், பெண்கள், பள்ளிச் சிறுவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனசேகர் நகர் பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையில் மது விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு வரும் மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டுச் சாலைகளிலேயே விழுந்து கிடப்பது, ஆடையின்றி சுற்றித் திரிவது மற்றும் பகிரங்கமாகச் சிறுநீர் கழிப்பது போன்ற அருவருக்கத்தக்கச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அந்த வழியாகச் செல்லும் பெண்கள், பள்ளிச் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். இப்பிரச்சனைக்கு உடனடியாக நிரந்தரத் தீர்வு காணும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் உடனடியாகப் புகார் தெரிவிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.
கடையை உடனடியாக இடமாற்றம் செய்யவோ அல்லது மூடவோ நடவடிக்கை எடுக்காவிட்டால், விரைவில் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அப்பகுதி பொதுமக்களும் வியாபாரிகளும் எச்சரித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:31:17 PM (IST)

கருணாநிதி நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:31:40 PM (IST)


