» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)
புதுக்கடை அருகே உயிரிழந்த பெண்ணின் பூட்டிய வீட்டிற்குள் புகுந்து 10 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற முன்னாள் ராணுவ வீரரைப் புதுக்கடை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கடை அருகே சடையன்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின்; இவரது மனைவி நவீனாகிரீஜி (39). இவர் கடந்த மாதம் 31-ஆம் தேதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவர் ஜஸ்டின் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு நடைக்காவு பகுதியில் உள்ள காப்பகம் ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் இவர்களது ஒரே மகன் ஜெபி நர்வீன், காப்புகாடு பகுதியில் உள்ள தனது பாட்டி பிரேமா என்பவரது வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 5-ஆம் தேதி பிரேமா தனது குடும்பத்தினருடன் உயிரிழந்த தனது மகளின் வீட்டிற்குச் சென்று அங்குள்ள பீரோவைத் திறந்து பார்த்தபோது, அதிலிருந்த 10 பவுன் நகைகள் மாயமாகியிருந்தது தெரியவந்தது. இது குறித்துப் பிரேமா அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிரேமாவின் இன்னொரு மருமகனான திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுந்தரமூர்த்தி மீது போலீசாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. சுந்தரமூர்த்தியைப் பிடித்துப் போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். தீவிர விசாரணையின் முடிவில் அவரே பீரோவிலிருந்து நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்துப் போலீசார் சுந்தரமூர்த்தியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்து நகைகளை விலைக்கு வாங்கிய நபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் பரிதாப பலி - ஒருவர் படுகாயம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:36:33 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:08:30 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)


