» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்காக வாதாட ப.சிதம்பரம் உட்பட 35 வழக்கறிஞர்கள் நியமனம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 11:13:20 AM (IST)

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மாநில நலன் சார்ந்த முக்கிய வழக்குகளைத் திறம்படவும் விரைந்தும் நடத்துவதற்காக, மூத்த வழக்கறிஞர் ப.சிதம்பரம் உட்பட 35 பேரை நியமித்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களை நியமிப்பது குறித்து அட்வகேட் ஜெனரலுடன் அரசு விரிவான ஆலோசனை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் டெல்லியில் ஆஜராகி வரும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி வழக்கறிஞர்கள் அடங்கிய 35 பேர் கொண்ட பெயர் பட்டியலை அட்வகேட் ஜெனரல் அரசுக்குப் பரிந்துரைத்தார்.
அட்வகேட் ஜெனரலின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, ப.சிதம்பரம், கே.கே. வேணுகோபால், அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல், முகுல் ரோத்தகி, சி.எஸ். வைத்தியநாதன், கோபால் சுப்பிரமணியன்,டி.எஸ். சிவஞானம், எஸ். நாகமுத்து, பி.என். பிரகாஷ், எம். சத்யநாராயணன், கே. ராதாகிருஷ்ணன்,ஆர். சுப்பிரமணியம் உள்பட 35 வழக்கறிஞர்கள் கொண்ட பட்டியலுக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
மாநிலத்தின் உரிமைகள் மற்றும் நலன்கள் சார்ந்த முக்கிய வழக்குகளைத் தங்குதடையின்றியும் விரைவாகவும் நடத்தித் தமிழக அரசின் சார்பில் வலுவான வாதங்களை முன்வைப்பதற்காக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த.வெ.க. அமைச்சர்கள் கமிஷன் வாங்க ஆரம்பித்துவிட்டனர் : அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:39:13 AM (IST)

திருமண ஆசை காட்டிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : வழக்கறிஞர் கேரளாவில் கைது!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:37:34 AM (IST)

என்ரிகா நிறுவனத்தின் 11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் நீக்கம்: டாஸ்மாக் உத்தரவு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 11:05:39 AM (IST)

காமநாயக்கன்பட்டியில் பரலோக மாதா தேர் பவனி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பிடு சேவை செய்து நேர்த்திக்கடன்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 9:31:05 AM (IST)

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:46:01 AM (IST)

தமிழகத்தைக் காக்கவே நாம் வந்துள்ளோம் : சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் உரை!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:16:55 AM (IST)


