» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை Vs லாட்டரி மருமகன் : தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:22:33 PM (IST)

தமிழக சட்டப்பேரவையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து விவகாரத்தின் போது ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை மற்றும் லாட்டரி மருமகன் என்று தவெக மற்றும் திமுக இடையே கடும் காரசார விவாதம் ஏற்பட்டது.
சட்டசபையில் தொழில்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டது குறித்த பேச்சுகள் எழுந்தன. அப்போது அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் எழுந்து, பரந்தூர் விமான நிலைய்ட திட்டத்திற்கு 5,846 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. அதில் பட்டா நிலங்கள் 3,774 ஏக்கரும், விவசாய நிலங்கள் 2,681 ஏக்கர்.
அதில் அரசு நிலங்கள் 1,972 ஏக்கர்.. அதில் நீர் நிலைகள் 1858 ஏக்கர்.. 90% நிலம் கையகப்படுத்தப்படவில்லை. மொத்தமாக 1,802 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஏகனாபுரம், காரை உள்ளிட்ட கிராமங்களில் ஒரு செண்ட் நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை. சென்னை விமான நிலையத்தில் 5வது டெர்மினல் திறந்தால், 55 மில்லியன் மக்களை கையாளக்கூடிய திறமை உருவாகும்.
இன்னும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை. அதிமுக காலத்தில் தொடங்கப்பட்ட போதும், எந்த நகர்வும் இந்த திட்டத்தில் இல்லை. ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காக தான் கதறுகிறார்கள் என்றார்.
இதற்கு திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசுகையில், வேறு எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையத்தை கொண்டு வருகிறீர்கள் என்று நானும் கேட்கிறேன்..
சென்னையின் புவியியல் அமைப்பிற்கு வேறு எந்த இடத்திற்கு விமான நிலையத்தை கொண்டு செல்ல முடியாது. பரந்தூரை தேர்வு செய்வதற்கு ஏர்போர்ட் அதாரிட்டி அனுமதி கொடுக்க வேண்டும். சோழிங்கநல்லூர், படாலம், பண்ணூர் என்று ஆய்வு செய்து, அதனை ஏர்போர்ட் அதாரிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை.
தெற்கில் ராணுவம் பகுதி, கல்பாக்கம், வேடந்தாங்கல் சரணாலயம் என்று அத்தனை திசைகளிலும் பிரச்சனை இருக்கின்றன. இதனால் மேற்கு பகுதிதான் வந்தோம். பண்ணூர், பரந்தூர் இடையில் ஒப்பிடு செய்தால், டெக்னிக்கல் பிரச்சனையை பார்க்கிறோம். சிப்காப், ஏர்போர்ட் என்று எதுவாக இருந்தாலும், அங்குள்ள மக்களை அப்புறப்படுத்த வேண்டும்.
எந்த இடத்தில் குறைந்த அளவில் மக்கள் பாதிக்கிறார்கள் என்று கணக்கிடுவோம். அந்த கணக்கீடு எல்லாம் செய்யப்பட்டு தான் பரந்தூர் என்று முடிவு செய்யப்பட்டது. அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. இதில் மத்திய அரசு இத்தனை இடங்களை பார்த்த பின்னரே, இந்த இடம் முடிவு செய்யப்பட்டது. நீங்கள் பார்க்க போகும் புதிய ஏர்போர்ட் இடங்களுக்கும் இதே பிரச்சனை வரும்.
சென்னை விமான நிலையத்தில் எப்படி 2வது ரன் வே அமைக்க முடியும். மீனம்பாக்கத்தில் இருந்து எத்தனை மக்களை அப்புறப்படுத்த போகிறீர்கள்.. பரந்தூரில் 2,500 மக்களி நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் முடிந்துவிட்டது. நீங்கள் சொல்லும் 1.5 டிரில்லியன் பொருளாதார இலக்குக்கு மாறாக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)

டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு: தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 7:52:27 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பிரதமர் மோடி கலந்துரையாடல்: ஆக.27-ல் நடைபெறுகிறது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:22:35 PM (IST)

அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு : பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:01:06 PM (IST)

பொதுவெளியில் மது அருந்துவதைத் தட்டிய கேட்ட நபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 7:56:10 PM (IST)

திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தல் தடை செப்.8 வரை நீட்டிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:49:04 PM (IST)


