» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் : மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:48:02 PM (IST)
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்அறிவித்துள்ளார்.
மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI Top class education in schools for OBC, EBC & DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது.2026-27 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) அறிவிக்கப்பட்டுள்ள (Top Class School) சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100% தேர்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ / மாணவியர்கள் கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல்/புதியது) திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https//scholarships gov in) விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9 - 10 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000/- மற்றும் 11 - 12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1,25,000/- வரை உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்படும். 30% மாணவியர்களுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்
• மாணவ/மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
• வருமான வரம்பு: குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
• 2025-26 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.
புதுப்பித்தல் (Renewal):
இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் (2025-26) கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ/மாணவியர்கள் நடப்பாண்டில் (2026-27) 10 ஆம் வகுப்பு மற்றும், 12 ஆம் வகுப்பு விண்ணப்பித்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதிசெய்து (National Scholarship Portal - (https://scholarships.gov.in)) புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித் தொகை படிவத்தை இணைப்பில் பூர்த்தி செய்து 31.08.2026-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை தத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்கான (புதுப்பித்தல் - for Renewal) கடைசி நாள் 15.09.2026
புதியது (Fresh):
(2026-27) புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ/மாணவியர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி NSP இணையத்தில் அறிவிக்கப்படும்.
மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அறிந்துக் கொள்ளலாம். தகுதியான மாணவ/மாணவியர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி நகராட்சி ஆணையர் மாற்றம் : நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:36:48 PM (IST)

4 கிலோவாட் மின் இணைப்புக்கு கள ஆய்வு இல்லை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய நடைமுறை!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:07:58 AM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)

தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதா; ஆளுநர் ஒப்புதல்
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:41:25 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 10:46:24 AM (IST)


