» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்: அஸ்வின் புதிய சாதனை!

வியாழன் 13, ஜூலை 2023 9:54:00 AM (IST)



சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆலிக் அதானஸ் மட்டும் 47 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 700 விக்கெட் வீழ்த்திய 3வது வீரர் அஸ்வின் ஆவார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 477 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டும், டி20 போட்டிகளில் 72 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். ஏற்கனவே அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்

மேலும் இந்த ஆட்டத்தில் டேகனரின் சந்திரபால் விக்கெட்டினை அஸ்வின் எடுத்துள்ளார். இவரது அப்பாவான ஷிவ்நரைன் சந்திரபால் விக்கெட்டினையும் 2011இல் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை, மகன் விக்கெட்டினை எடுத்து அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory