» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

துலீப் டிராபி கிரிக்கெட்: தெற்கு மண்டலம் ‘சாம்பியன்’

திங்கள் 17, ஜூலை 2023 5:47:52 PM (IST)



துலீப் டிராபி கிரிக்கெட் பைனலில் அசத்திய தெற்கு மண்டல அணி, 75 ரன் வித்தியாசத்தில் மேற்கு மண்டலத்தை வீழ்த்தி கோப்பை வென்றது.

பெங்களூருவில் நடந்த துலீப் டிராபி கிரிக்கெட் பைனலில் மேற்கு, தெற்கு மண்டல அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தெற்கு மண்டலம் 213, மேற்கு மண்டலம் 146 ரன் எடுத்தன. தெற்கு மண்டல அணி, 2வது இன்னிங்சில் 230 ரன் எடுத்தது. பின், 298 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய மேற்கு மண்டல அணி, நான்காம் நாள் முடிவில் 182/5 ரன் எடுத்திருந்தது. பிரியங்க் (92) அவுட்டாகாமல் இருந்தார்.

நேற்று, ஐந்தாம் நாள் ஆட்டம் நடந்தது. கைவசம் 5 விக்கெட் வைத்திருந்த மேற்கு மண்டல அணிக்கு 116 ரன் தேவைப்பட்டது. கேப்டன் பிரியங்க் பன்சால் (95) நிலைக்கவில்லை. ஷாம்ஸ் முலானி (2) ஏமாற்றினார். சாய் கிஷோர் ‘சுழலில்’ தர்மேந்திரசின் ஜடேஜா (15), சிந்தன் காஜா (0), அதித் ஷெத் (9) சிக்கினர்.

‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய மேற்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 222 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. தெற்கு மண்டலம் சார்பில் வாசுகி கவுசிக், சாய் கிஷோர் தலா 4 விக்கெட் சாய்த்தனர். தெற்கு மண்டல அணி, 14வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory