» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வங்கதேசத்திற்கு எதிரான வெற்றி உத்வேகம் அளிக்கிறது: பாக். கேப்டன் பாபர் ஆசம்!

புதன் 1, நவம்பர் 2023 10:33:19 AM (IST)



உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வங்காளதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின்னர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் மூன்று வகையான துறைகளிலும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக பக்கர் ஜமான் 20-30 ஓவர் வரை நின்று பேட்டிங் செய்து விட்டால் அந்த போட்டி நிச்சயம் வித்தியாசமான போட்டியாக மாறிவிடும். அந்த அளவிற்கு அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர்.

இன்று அவர் தனது அதிரடியான ஆட்டத்தை விளையாடினார். அவரது பேட்டிங்கை பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. இனிவரும் இரண்டு போட்டியிலும் நாங்கள் வெற்றி பெற்று அதன்பின் என்ன நடக்கிறது? என்பதை காணவிருக்கிறோம்.

இந்த போட்டியில் எங்களது அணியின் சார்பாக பந்துவீச்சில் ஷாஹீன் அப்ரிடி தொடக்கத்திலேயே மிகச்சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தார். மிடில் ஓவர்களிலும் வங்காளதேச அணியின் வீரர்களை பெரிய பார்ட்னர்ஷிப் ஏற்படுத்த விடாமல் எங்களது அணியின் வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த மைதானத்தில் இந்திய ரசிகர்கள் எனக்கும் எங்களது அணிக்கும் தந்த வரவேற்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory