» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி: இந்திய அணி சாதனை!
சனி 2, டிசம்பர் 2023 11:46:25 AM (IST)

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் அதிரடியாக ஆடிய இந்தியா 20 ஓவரில் 174 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, டி20 தொடரை 3-1 கைப்பற்றி அசத்தியது.
இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று பெற்ற வெற்றி இந்திய அணியின் 136 டி20 வெற்றி ஆகும். 213 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கும் இந்திய அணி அதில் 136 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் அணி 226 டி20 போட்டிகளில் ஆடி 135 வெற்றிகளைப் பெற்றிருந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது. மேலும், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் நடந்த 14 டி20 தொடர்களில் இந்தியா தொடர் வெற்றி பெற்றுள்ளது என்ற சாதனையையும் படைத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐசிசி டி20 தரவரிசை: வருண் சக்கரவர்த்தி முதலிடம்!
புதன் 17, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

மேட்ச் ரெஃப்ரீயை நீக்க முடியாது: பாக். கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி
புதன் 17, செப்டம்பர் 2025 10:58:42 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4’ சுற்றுக்கு இந்திய அணி தகுதி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:41:37 PM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:33:53 AM (IST)

பிசிசிஐ தலைவராக நியமனம்? சச்சின் மறுப்பு!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:40:15 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: எமிரேட்ஸ் அணியை பந்தாடிய இந்தியா!
வியாழன் 11, செப்டம்பர் 2025 10:50:35 AM (IST)
