» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: 5-வது இடத்துக்கு சறுக்கிய இந்திய அணி!

திங்கள் 29, ஜனவரி 2024 5:11:18 PM (IST)



இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோல்வி எதிரொலியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 5-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தவரிசையில் 5-வது இடத்துக்கு  சறுக்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை டிரா செய்ததன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வந்தது. பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியது. 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு இந்திய அணி 54.16 சதவிகித புள்ளிகளில் இருந்து 43.33 சதவிகித புள்ளிகளாக குறைந்தது. இந்த தரவரிசையில் 55 சதவிகித புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் 50 சதவிகித புள்ளிகளுடன் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory